< Back
சினிமா துளிகள்
நமக்கு என்ன வருமோ அந்த ஸ்டைல்ல போய்டுவோம் -நடிகர் கார்த்திக்
சினிமா துளிகள்

நமக்கு என்ன வருமோ அந்த ஸ்டைல்ல போய்டுவோம் -நடிகர் கார்த்திக்

தினத்தந்தி
|
21 July 2022 11:20 PM IST

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'. 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'சர்தார்' படத்தின் டப்பிங்கின் போது கார்த்தியுடன் நடந்த உரையாடல் வீடியோவை இயக்குனர் மித்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் மித்ரன், கார்த்தியிடம் "நாயகன் கமல் சார் மாதிரி கொஞ்சம் பேசுங்கள் இந்த வசனம் அதிலிருந்து இன்ஸ்பைர் ஆகி எழுதியது என்று கூறுகிறார். இதற்கு கார்த்தி எங்க நீங்க பேசி காட்டுங்க.., நமக்கு என்ன வருமோ அந்த ஸ்டைல்ல போய்டுவோம்" என்று கூறிவிட்டு "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் நாற்பதாயிரம் பேருக்கு தெரியுற மாறி பண்ணனும்" என்று படத்தில் இடம்பெற்ற வசனத்தை டப்பிங் பேசுகிறார்.

மேலும் செய்திகள்