< Back
சினிமா துளிகள்
ஐஸ்வர்யா ராயை நடிக்க விடுங்கள்
சினிமா துளிகள்

ஐஸ்வர்யா ராயை நடிக்க விடுங்கள்

தினத்தந்தி
|
12 May 2023 1:16 PM IST

'பொன்னியின் செல்வன்-2' படம் வெளியானதில் இருந்தே ஐஸ்வர்யா ராயின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சனும் டுவிட்டரில் வாழ்த்து சொன்னார். அப்போது ஒரு ரசிகர், 'இனியாவது ஐஸ்வர்யாவை அதிக படங்களில் நடிக்க விடுங்கள், ஆராத்யாவை (மகள்) நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்' என கூறியிருந்தார். இதற்கு, 'ஐஸ்வர்யா ராய் எதை செய்வதற்கும் என் அனுமதி தேவையில்லை. குறிப்பாக அவர் அதிகம் விரும்பும் ஒரு விஷயத்தை...' என கூலாக பதில் அளித்து இருக்கிறார் அபிஷேக்.

மேலும் செய்திகள்