< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
மனைவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான்...
|9 Jun 2023 1:28 PM IST
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தற்போது படங்கள் தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று மனம் திறந்து பேசினார். "நான் பார்த்ததிலேயே அழகான பெண் என்றால் என் மனைவி ஸ்ரீதேவி தான். அவருக்கு அடுத்து அழகு என்றால் நடிகை கீர்த்தி சுரேஷ் தான்" என்று குறிப்பிட்டார். கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஜோடியாக 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் போனி கபூர் தயாரிக்கும் படங்களிலும் அவர் நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.