< Back
சினிமா துளிகள்
கார்த்திகேயன்- சுபிக்‌ஷா இணைந்து நடிக்கும் சூரகன்
சினிமா துளிகள்

கார்த்திகேயன்- சுபிக்‌ஷா இணைந்து நடிக்கும் 'சூரகன்'

தினத்தந்தி
|
19 Aug 2022 3:56 PM IST

படத்தில் வி.கார்த்திகேயன் என்ற வக்கீல், கதாநாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றுள்ளார்.

வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் கண் முன், ஒரு குற்றம் நடக்கிறது. குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க அவர் துப்பறிகிறார். இதற்கு காவல் துறையின் உயர் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களை மீறி அந்த அதிகாரி செயல்பட்டாரா, இல்லையா? என்பதை கருவாக வைத்து, 'சூரகன்' என்ற படம் தயாராகிறது.

இந்தப் படத்தில் வி.கார்த்திகேயன் என்ற வக்கீல், கதாநாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றுள்ளார். சுபிக்‌ஷா, வின்சென்ட் அசோகன், பாண்டியராஜன், மன்சூர் அலிகான், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சதீஷ் ஜி.குமார் ஒளிப்பதிவு செய்து இயக்க, அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். படத்தில் 4 சண்டை காட்சிகளுடன், ஒரு கார் துரத்தல் காட்சியும் இடம் பெறுகிறது என்று டைரக்டர் சதீஷ் ஜி.குமார் கூறினார்.

மேலும் செய்திகள்