< Back
சினிமா துளிகள்
கார்த்தி படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தெலுங்கு நடிகர்
சினிமா துளிகள்

கார்த்தி படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தெலுங்கு நடிகர்

தினத்தந்தி
|
29 Jun 2022 10:26 PM IST

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'. 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திர வெளியீட்டு உரிமையை நடிகர் நாகர்ஜுனாவின் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி " நாகர்ஜுனா காருவுடன் நான் இருக்கும் போது எப்போதும் நல்ல விதமாக உணர்வேன். தற்போது அவர் என் படத்தின் பின்னால் இருப்பதனால் என்னை மிக உறுதியானவனாக உணர்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். மேலும் சர்தார் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்