< Back
சினிமா துளிகள்
கமலின் ஆதங்கம்
சினிமா துளிகள்

கமலின் ஆதங்கம்

தினத்தந்தி
|
20 Jan 2023 12:41 PM IST

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அதில் காணொலி வழியாக போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், சவால்கள் என்ற பெயரில் அடையாளத்தை தொலைத்து நிற்பதாக ஆதங்கத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது ''மனிதனுக்கு சுயமரியாதை என்பது மிகவும் முக்கியம். சுயமரியாதையை கெடுக்கும் எந்த விளையாட்டையும் தயவு செய்து விளையாடாதீர்கள்.

எந்த விளையாட்டிலும் அநாகரிகமும் கேலியும் இருக்கக் கூடாது'' என்றார். கமல்ஹாசன் கருத்து பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்