< Back
சினிமா துளிகள்
ஜெயம் ரவி படத்தின் புதிய அறிவிப்பு
சினிமா துளிகள்

ஜெயம் ரவி படத்தின் புதிய அறிவிப்பு

தினத்தந்தி
|
28 Aug 2022 11:28 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஜெ.ஆர்.30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் 31-வது படம் குறித்த அப்டேட் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்