< Back
சினிமா துளிகள்
ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்
சினிமா துளிகள்

ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்

தினத்தந்தி
|
2 Oct 2023 11:03 AM IST

ஆபாச இணைய தளத்தில் தனது படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்து உள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அடுத்து தமிழ் படத்தில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.

ஜான்வி கபூருக்கு தற்போது 26 வயது ஆகிறது. இந்த நிலையில் ஆபாச இணைய தளத்தில் தனது படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், '' பிரபலத்தின் வீட்டு குழந்தையாக வளர்வது கஷ்டம். சிறு வயதில் எனது புகைப்படங்களை மார்பிங் செய்து அவற்றை ஆபாச இணைய தளங்களில் வெளியிட்டனர். நடிகையாக அறிமுகமாக போகிறார் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

இது எனக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சியானேன். அதை பார்த்து என்னுடன் படித்தவர்கள் கேலி செய்தனர். என்னை ஒதுக்கி வைத்தார்கள். இது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. டெக்னாலஜி வளரும் இந்த காலகட்டங்களில் மார்பிங், போலி புகைப்படங்கள் சாதாராணமாகி விட்டன. ஆனாலும் மார்பிங் புகைப்படங்களை உண்மைதான் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள்.'' என்றார்.


மேலும் செய்திகள்