< Back
சினிமா துளிகள்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகர் சூர்யா டுவீட்
சினிமா துளிகள்

'ஜல்லிக்கட்டு தீர்ப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது' - நடிகர் சூர்யா டுவீட்

தினத்தந்தி
|
19 May 2023 3:53 PM IST

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை நேற்று அறிவித்தனர்.

அதில், ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும். என்று தீர்ப்பளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்று நடிகர் சூர்யா தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது;

"நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் கன்னடத்தின் கம்பாள கலாச்சாரத்திற்கும் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு நிகழ்வு குறித்து மதிப்பிற்குரிய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியும் பெருமையையும் அடைகின்றேன்.. இரு மாநில அரசிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தொடர்ந்து போராடிய அனைவர்க்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்