< Back
சினிமா துளிகள்
இது ஒரு விதமான மனநோய்.. நடிகை பிரியா பவானி சங்கர் விமர்சனம்...
சினிமா துளிகள்

இது ஒரு விதமான மனநோய்.. நடிகை பிரியா பவானி சங்கர் விமர்சனம்...

தினத்தந்தி
|
13 Sept 2022 11:33 PM IST

நடிகை பிரியா பவானி சங்கர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகியது. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இவர் நடிப்பில் பொம்மை, அகிலன், ருத்ரன் போன்ற படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளன. இதைத்தொடர்ந்து, இந்தியன் 2, பத்துத்தல போன்ற படங்கள் இவரின் கைவசம் உள்ளது. இவர் சமூக பிரச்சினைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கணவரின் இயலாமையை கேலி செய்யும் மனைவியிடம் அறியாமை தவறில்லை என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் அந்த மனைவியிடம் கணவருக்காக பரிந்து பேசுவார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் செய்திகள்