< Back
சினிமா துளிகள்
அவரால் தான் என் சினிமா பயணம் தொடங்கியது- ஐஸ்வர்யா ராய் நெகிழ்ச்சி
சினிமா துளிகள்

அவரால் தான் என் சினிமா பயணம் தொடங்கியது- ஐஸ்வர்யா ராய் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
8 Sept 2022 10:29 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் டிரைலர் ரஜினி மற்றும் கமல் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் பேசியதாவது, "மணிரத்னம் எனது குரு. அவர் மூலமாகவே எனது சினிமா பயணம் தொடங்கியது. அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்த படம் எங்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளது. இது எல்லோருக்கும் நிச்சயம் மகிழ்ச்சியான அனுபவத்தை தரும்" என்றார்.

நடிகை திரிஷா பேசியது, 'ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோருக்கு ஏற்கனவே ஜோடியாக நடித்திருக்கிறேன். ஆனால், இந்த படத்தில் அவர்களின் சகோதரியாக நடித்துள்ளேன். இந்த படத்தில் நடித்தது பெருமை' என்றார்.

மேலும் செய்திகள்