< Back
சினிமா துளிகள்
இந்த வெற்றியை சந்திக்க பல காலம் ஆனது - இயக்குனர் பார்த்திபன்
சினிமா துளிகள்

இந்த வெற்றியை சந்திக்க பல காலம் ஆனது - இயக்குனர் பார்த்திபன்

தினத்தந்தி
|
7 Sept 2022 10:20 PM IST

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பார்த்திபன் அருண் விஜய் குறித்து பேசியுள்ளார்.

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, "நடிகர் அருண் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு சிறந்த நடிகருடைய நடிப்பை நேரில் பார்த்த சந்தோசம் எனக்கு கிடைத்தது. அவர் இன்னும் நிறைய உயரத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது, அவருடைய பாடும் திறமையை பாராட்டி ஆக வேண்டும். இவ்வளவு நன்றாக பாடுவார் என எனக்கு தெரியாது. இயக்குனர் குமரவேலன் திறமையான இயக்குனர், அவருடன் மூன்று படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட, அவர் இந்த படத்தில் சிறப்பான பணியை கொடுத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது, அனைவரும் படம் பாருங்கள் நன்றி என்றார்.

இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது, "அருண் விஜய் வெற்றியை சந்திக்க பல காலம் ஆகியது. அவர் தனது தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருத்தர். இசையமைப்பாளர் சபீர் உடைய பாடல் மயக்கும் அளவில் இருக்கிறது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.

மேலும் செய்திகள்