< Back
சினிமா துளிகள்
தந்தை வழியில்
சினிமா துளிகள்

தந்தை வழியில்

தினத்தந்தி
|
17 March 2023 11:41 AM IST

சினிமாவில் அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர் என்றால், அதில் நடிகர் விக்ரமும் அடங்குவார். அவரது மகன் துருவ் விக்ரமும் தந்தை பாணியில் உடலை வருத்தி நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 'ஆதித்ய வர்மா' படத்துக்கு பிறகு, மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் துருவ் நடிக்கிறார். இது விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படம். இதற்காக தீவிர உடற் பயிற்சிகள் மூலம் உடலை வலுவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்கின்றனர்.

மேலும் செய்திகள்