< Back
சினிமா துளிகள்
திரைக்கதையில் உணர்வு இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது - இயக்குனர் மிஷ்கின்
சினிமா துளிகள்

திரைக்கதையில் உணர்வு இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது - இயக்குனர் மிஷ்கின்

தினத்தந்தி
|
31 July 2022 11:29 PM IST

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இப்படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில் இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, "எனது உதவியாளனாக இருந்த ஸ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது.

ஸ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது. எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம் தான் எடுப்பார்கள். இந்த படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார். பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். அனைவரும் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்