< Back
சினிமா துளிகள்
உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்- சிவராஜ் குமார்
சினிமா துளிகள்

உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்- சிவராஜ் குமார்

தினத்தந்தி
|
13 Aug 2023 10:22 PM IST

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவராஜ் குமார் படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்