< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
வெங்கட் பிரபுவுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்.. போஸ்டர் வைரல்
|28 April 2023 10:09 PM IST
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.