< Back
சினிமா துளிகள்
பரிசு வழங்கிய ரவிமரியா
சினிமா துளிகள்

பரிசு வழங்கிய ரவிமரியா

தினத்தந்தி
|
30 Jun 2023 12:59 PM IST

பி.வாசு இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'சந்திரமுகி'. இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி-2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், ராவ் ரமேஷ் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் நடிகர் ரவிமரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் 'டப்பிங்'கை பேசி முடித்த ரவி மரியா, சந்தோஷத்தில் உதவி இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர்கள் அனைவருக்கும் அழகிய கை கடிகாரத்தை பரிசளித்துள்ளார். நல்ல மனம் வாழ்க...

மேலும் செய்திகள்