< Back
சினிமா துளிகள்
ஓ.டி.டி. தளங்களை சாடிய ஜெனிலியா
சினிமா துளிகள்

ஓ.டி.டி. தளங்களை சாடிய ஜெனிலியா

தினத்தந்தி
|
27 July 2023 5:54 PM IST

ஓ.டி.டி தளங்களில் வரும் படங்களையோ, வெப் தொடர்களையோ குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க முடியவில்லை. குடும்பத்தோடும் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்கிறார் ஜெனிலியா.

தமிழில் 'பாய்ஸ்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'உத்தமபுத்திரன்', 'வேலாயுதம்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஜெனிலியா இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். 2 குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இதுகுறித்து ஜெனிலியா அளித்துள்ள பேட்டியில், "குழந்தைகளை பராமரிக்க வேண்டி இருந்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தேன். இப்போது அவர்களுக்கு எனது தேவை அதிகம் இல்லை என்பதால் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன். டிரையல் என்ற வெப் தொடரிலும் நடித்து இருக்கிறேன். ஓ.டி.டி தளங்களில் வரும் படங்களையோ, வெப் தொடர்களையோ குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க முடியவில்லை. குடும்பத்தோடும் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு மோசமாக உள்ளது. இதற்கு மத்தியில் எல்லோரும் பார்க்கும் வகையில் டிரையல் வெப் தொடர் கதை இருந்ததால் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.

மேலும் செய்திகள்