மீண்டும் துல்கர் சல்மானுடன் இணைந்த கவுதம் மேனன்.. வெளியான போஸ்டர்..
|ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் துல்கர் சல்மான். இவர் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாகிவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'சீதா ராமம்' ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடித்துள்ள கவுதம் மேனன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ராணுவ அதிகாரி தோற்றத்தில் இருக்கும் கவுதம் மேனன் கதாபாத்திரத்தின் பெயர் மேஜர் செல்வம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மானும் கவுதம் மேனனும், சீதா ராமம் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.