< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
பட அதிபர் வி.ஏ.துரை வில்லன் ஆனார்
|14 Oct 2022 8:46 AM IST
‘பழங்குடி’ என்ற புதிய படத்தில் பட அதிபர் வி.ஏ.துரை வில்லனாக நடிக்கிறார்.
கஜேந்திரா, என்னம்மா கண்ணு, பிதாமகன் ஆகிய படங்களை தயாரித்தவர், வி.ஏ.துரை. இவர், 'பழங்குடி' என்ற புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில், கதைநாயகனாக ஊட்டி சிவா, கதைநாயகியாக மீரா நடிக்கிறார்கள்.
நவாஸ் குன்றோமல் தயாரித்துள்ள இந்தப் படத்தை திருப்போரூர் திராவிடன் இயக்கியிருக்கிறார். அடர்ந்த காட்டுப் பகுதியில் கொத்தடிமைகளாக வாழும் இருளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் தயாராகி வருகிறது.
"படத்துக்காக 60 ஏக்கர் நிலத்தில் செங்கல் சூளை போட்டு முக்கிய காட்சிகளை படமாக்கி இருக்கிறோம்" என்று டைரக்டர் திருப்போரூர் திராவிடன் கூறினார்.