< Back
சினிமா துளிகள்
துல்கர் சல்மான் படத்தின் புதிய அப்டேட்
சினிமா துளிகள்

துல்கர் சல்மான் படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
20 July 2022 10:24 PM IST

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் துல்கர் சல்மான். இவர் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாகிவுள்ள இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் 'கண்ணில் கண்ணில்' லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகை நஸ்ரியா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்