ஆசிய நடிகரான டோவினோ தாமஸ்.. எந்த படத்திற்கு தெரியுமா?
|மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் மாயா நதி, மின்னல் முரளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் ந டிப்பில் வெளியான '2018' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் டோவினோ தாமஸ் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டியப் படங்களின் வரிசையில் இடம்பெற்றது. மேலும் மக்களிடம் 'இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி' என்கிற பாராட்டுக்களையும் பெற்றது.
நடிகர் டோவினோ தாமஸ் சமீபத்தில் செப்டிமியஸ், சிறந்த ஆசிய திரைப்பட நடிகருக்கானப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள டோவினோ தாமஸ், "ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018-ல் நம்மை தாக்கி பெருவெள்ளத்தால் கேரளா விழத் தொடங்கியது. பிறகு, நாம் எத்தகைய மன உறுதி மிக்கவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம். 2018 படத்திற்காக சிறந்த ஆசிய நடிகர் என்ற விருது வழங்கிய செப்டிமியஸ் விருது குழுவுக்கு நன்றி. இந்த விருது கேரளாவுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.