< Back
சினிமா துளிகள்
திரைக்கலையின் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் - இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சி
சினிமா துளிகள்

திரைக்கலையின் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் - இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
6 Oct 2022 11:33 PM IST

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ௫ மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.

ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், "பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் கவர்கிறது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான வரலாற்று திரைப்படம். மணிரத்னம் சார் திரைக்கலையின் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்