< Back
சினிமா துளிகள்
கங்கை கொண்ட சோழபுரத்தில் உலா வரும் இயக்குனர் மோகன் ஜி
சினிமா துளிகள்

கங்கை கொண்ட சோழபுரத்தில் உலா வரும் இயக்குனர் மோகன் ஜி

தினத்தந்தி
|
4 Jun 2023 11:19 PM IST

மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் மோகன் ஜி புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இவர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் மோகன் ஜி அரியலூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்