< Back
சினிமா துளிகள்
படத்திற்காக சாலைகளில் போஸ்டர் ஒட்டிய இயக்குனர் மோகன் ஜி
சினிமா துளிகள்

படத்திற்காக சாலைகளில் போஸ்டர் ஒட்டிய இயக்குனர் மோகன் ஜி

தினத்தந்தி
|
23 Feb 2023 10:56 PM IST

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பகாசூரன்’. இப்படத்திற்காக இயக்குனர் மோகன் ஜி சாலைகளில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பகாசூரன் படத்திற்காக சென்னையில் உள்ள சாலைகளில் படத்தின் போஸ்டரை ஒட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து படத்திற்காக எளிமையாக அவரே போஸ்டர் ஒட்டியதை பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்