< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
டைரக்டர் ஹரி கண்டிப்பான மாஸ்டர்- அருண் விஜய்
|24 Jun 2022 5:26 PM IST
டைரக்டர் ஹரி கண்டிப்பான மாஸ்டர் என்று நடிகர் அருண் விஜய் கூறினார்.
அருண் விஜய் தற்போது அவருடைய மைத்துனர் ஹரி இயக்கத்தில், 'யானை' படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்தப் படத்தின் அனுபவங்களை கதாநாயகன் அருண் விஜய் விளக்கினார்.
''இந்தப் படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். என் கதாபாத்திரம், சுற்றியுள்ளவர்களை பாதுகாப்பது. படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. சண்டை காட்சிகளில் நடித்தபோது, எனக்கு அடிபட்டது.
ரொம்ப நாள் கழித்து கிராமத்து கதையம்சம் உள்ள படத்தில் நடித்து இருக்கிறேன். எனக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்திருக்கிறார். பல காட்சிகளில் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறேன். படம் எளிதாக அனைவரையும் ஈர்க்கும்.
ஹரி, கண்டிப்பான மாஸ்டர். அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம், எங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது" என்றார், அருண் விஜய்.