< Back
சினிமா துளிகள்
சந்தானம் படத்தின் அப்டேட் கொடுக்கும் இயக்குனர் கவுதம் மேனன்
சினிமா துளிகள்

சந்தானம் படத்தின் அப்டேட் கொடுக்கும் இயக்குனர் கவுதம் மேனன்

தினத்தந்தி
|
1 Sept 2022 10:10 PM IST

இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சாண்டா 15. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா போப் இணைந்துள்ளார்.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சாண்டா 15. பெயரிடப்படாத இப்படத்தை புரொடக்‌ஷன் எண்10 (சாண்டா 15) என்று தயாரித்துள்ளனர்.

சந்தானத்தின் 15-வது திரைப்படமாக தயாராகி உள்ள இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சாண்டா 15 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் நாளை (31-08-2022) காலை 11:29 மணிக்கு வெளியிடுவார் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்