< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
பேமிலி ஆடியன்ஸை கவரும் நோக்கில் தோனியின் முதல் தமிழ் படம்
|25 Oct 2022 11:13 AM IST
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரா சிங் தோனி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார்.
ராஞ்சி,
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் ஆகியோர் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் படத்தை தமிழில் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கம் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு படம் எனவும், 'அதர்வா- தி ஆர்ஜின்' எனும் கிராபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குவதாகவும் தெரிகிறது. இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர்.
மேலும், குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரிக்கவும் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாராகி வருகிறது.