< Back
சினிமா துளிகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
சினிமா துளிகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

தினத்தந்தி
|
19 May 2023 12:33 PM IST

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் அவரை, அடுத்த 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்கள் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான். அது ரஜினிகாந்த்தான். 'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நயன்தாராவுக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் சூப்பர் ஸ்டார் இல்லை" என்றார்.

மேலும் செய்திகள்