< Back
சினிமா துளிகள்
டிமான்ட்டி காலனி- 2 மாஸ் அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து
சினிமா துளிகள்

டிமான்ட்டி காலனி- 2 மாஸ் அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து

தினத்தந்தி
|
30 Jun 2023 10:20 PM IST

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி- 2' இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்