< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
பிற மொழி படங்களையும் இயக்க முடிவு; லோகேஷ் கனகராஜின் அடுத்த திட்டம்
|29 July 2022 10:46 AM IST
ராம்சரண் படத்தை இயக்கப்போவதாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர், லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் நடிப்பில் இவர் இயக்கி வெற்றி பெற்ற 'விக்ரம்' படம், இவரை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியது. இவருடைய அடுத்த படம் என்ன? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், ''தெலுங்கு பட உலகின் பிரபல கதாநாயகன் ராம்சரணுடன் நான் பணியாற்றினால், அது மிகப்பெரிய படமாக இருக்கும். இப்போது நானும், அவரும் வெவ்வேறு படங்களில் பணி புரிந்து வருகிறோம். அந்தப் படங்கள் முடிவடைந்த பின், இருவரும் இணைந்து பணிபுரியும் படம் தொடங்கும்" என்று கூறினார்.
இதன் மூலம் அவர் பிற மொழி படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவருகிறது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.