< Back
சினிமா துளிகள்
சிபி சத்யராஜ் படத்தின் புதிய அப்டேட்
சினிமா துளிகள்

சிபி சத்யராஜ் படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
13 July 2022 10:38 PM IST

இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் அருண்மொழி மாணிக்கம் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம்.

இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்