< Back
சினிமா துளிகள்
அருள்நிதியுடன் இணைந்த பாரதிராஜா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சினிமா துளிகள்

அருள்நிதியுடன் இணைந்த பாரதிராஜா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தினத்தந்தி
|
17 Feb 2023 10:30 PM IST

லைகா புரொடக்ஷன்ஸ் தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளார்.

தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது 'பொன்னியின் செல்வன் 2', 'இந்தியன் 2', 'லால் சலாம்' மற்றும் அஜித் 62 படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிருவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 'திருவின் குரல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்