< Back
சினிமா துளிகள்
பெங்காலி நடிகர்  தற்கொலை முயற்சி
சினிமா துளிகள்

பெங்காலி நடிகர் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
11 Aug 2022 2:29 PM IST

பெங்காலி நடிகரான சைபல் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்று காயத்துடன் முகநூலில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

பிரபல பெங்காலி நடிகர் சைபல் பட்டாச்சார்யா. இவர் பெங்காலி மொழி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த பிரோத்ஹோமா காதம்பினி என்ற பெங்காலி தொடர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கொல்கத்தாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சைபல் பட்டாச்சார்யா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக முகநூலில் வீடியோ வெளியிட்டு வீட்டில் கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். பலத்த ரத்த காயத்துடன் அவரை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சைபல் பட்டாச்சார்யாவுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் விரக்தியில் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பெங்காலி நடிகைகள் பல்லவி டே, பிதிஷா டி மஜூம்தார், மஞ்சுஷா நியோகி ஆகிய பெங்காலி நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது சைபல் பட்டாச்சார்யாவும் தற்கொலைக்கு முயன்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்