< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
சிங்கிள் என்பது கெட்ட வார்த்தையா? தபு விளக்கம்
|5 Nov 2023 5:15 AM IST
தவறான துணையுடன் எதிர்கொள்ளும் வாழ்க்கை, தனிமையை விட மோசமானது என்று தபு கூறினார்.
52-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் தபு இன்னும் முரட்டு சிங்கிளாகவே சுற்றிக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிங்கிள் என்பது கெட்ட வார்த்தை அல்ல. உறவில்லாத பல விஷயங்களில் இருந்தும் மகிழ்ச்சியை நாம் பெறமுடியும். தனிமையை நாம் சமாளித்து விடலாம். ஆனால் தவறான துணையுடன் எதிர்கொள்ளும் வாழ்க்கை, தனிமையை விட மோசமானது.
இளமையில் காதல் வரும். புதுப்புது எண்ணமும் தோன்றும். ஆனால் என் உலகம் வேறு. அதை வித்தியாசமாக அமைக்க விரும்பினேன். எந்த உறவும் அடக்குமுறையில் முழுமையடையாது.
திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். என்னை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் யாரோ இருவரின் மனதை உடைத்து அந்த குழந்தையை சொந்தமாக்கிக்கொள்ள விரும்பவில்லை, என்று தபு மனம் திறந்தார்.