< Back
சினிமா துளிகள்
பிறந்தநாளில் வெளியாகும் அருள்நிதி திரைப்படம்
சினிமா துளிகள்

பிறந்தநாளில் வெளியாகும் அருள்நிதி திரைப்படம்

தினத்தந்தி
|
13 Jun 2022 10:55 PM IST

அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள படத்தின் அறிவிப்பு. நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'தேஜாவு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் நடிகை ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்