< Back
சினிமா துளிகள்
கதாபாத்திரத்துக்காக எடையை கூட்டிய அபர்ணதி
சினிமா துளிகள்

கதாபாத்திரத்துக்காக எடையை கூட்டிய அபர்ணதி

தினத்தந்தி
|
8 Sept 2023 12:15 PM IST

சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து `தேன்', `ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த இரண்டு படங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றார்.

தற்போது அபர்ணதி `இருகப்பற்று' என்ற படத்தில் நடித்துள்ளார். எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, சானியா ஐயப்பன் ஆகியோரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்காக அவர் உடல் எடையை கூட்டி இருக்கிறார். உடல் எடை கூடி குண்டாக இருக்கும் புகைப்படத்தை அபர்ணதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார். இந்த தோற்றத்துக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்