< Back
சினிமா துளிகள்
இன்னொரு வாரிசு
சினிமா துளிகள்

இன்னொரு வாரிசு

தினத்தந்தி
|
14 July 2023 2:16 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவரான ஸ்டண்ட் சிவாவின் மகன் கெவின் குமார் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர் கடந்த பல வருடங்களாகவே தனது தந்தையுடன் இணைந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆக்சன் காட்சிகளில் பணியாற்றியதுடன் அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டுள்ளார்.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா' மற்றும் தற்போது தயாராகி வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் ஆகிய படங்களில் ஒருசில சண்டைக் காட்சிகளை தானே வடிவமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை வடிவமைத்த கெவின் குமார் நேர்த்தியை பார்த்து வியந்துபோன ரஜினிகாந்த், அவரை பாராட்டியதுடன் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குனராக வரவேண்டும் என ஆசிகளையும் வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்