< Back
சினிமா துளிகள்
சர்வதேச விருதுகள் பெற்ற திகில் கதை
சினிமா துளிகள்

சர்வதேச விருதுகள் பெற்ற திகில் கதை

தினத்தந்தி
|
23 Jun 2023 10:05 AM IST

`கண்டதை படிக்காதே' என்ற பெயரில் அமானுஷ்ய பேய் திரில்லர் படம் தயாராகி உள்ளது. ஜோதி முருகன் டைரக்டு செய்துள்ளார். சத்யநாராயணன் தயாரித்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``சென்னையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். விசாரணையில் ஒரு எழுத்தாளர் எழுதிய திகில் கதையை, இணைய தளத்தில் படித்த ஒவ்வொரு வாசகரும் இறந்து போன திகில் சம்பவம் தெரிய வருகிறது.

கொலைக்கு பின்னணியில் ஒரு சாமியாரும், ஆவிகளும் இருப்பதையும் அறிகிறார். அந்த ஆவிகளை போலீஸ் அதிகாரி எதிர்கொண்டு கதையை படிப்பவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை'' என்றார்.

சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ், ஆரியன், ராஜ் நவீன், சபிதா ஆனந்த், தயாரிப்பாளர் சத்யநாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை: செல்வா ஜானகிராஜ், ஒளிப்பதிவு: மஹிபாலன். இந்த படம் 11 நாடுகளில் பல்வேறு விழாக்களில் திரையிடப்பட்டு ஒன்பது சர்வதேச விருதுகள் வென்றுள்ளது.

மேலும் செய்திகள்