< Back
சினிமா துளிகள்
எனக்கு திருமணமா? அதிர்ச்சியில் நடிகை ரெஜினா
சினிமா துளிகள்

எனக்கு திருமணமா? அதிர்ச்சியில் நடிகை ரெஜினா

தினத்தந்தி
|
9 Sept 2022 11:25 PM IST

தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளன.

ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில், "2020-ல் எனது காதல் முறிந்துபோனது. அதில் இருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனோ, இல்லையோ என்பது எனக்கே தெரியாது. ஏனென்றால் சிறு வயது முதலே தனது காலில் சுயமாக வாழ்வது எப்படி என்பது பற்றி என் அம்மா என்னை பழக்கப்படுத்தி வைத்துள்ளார். எனவே வாழ்க்கையில் யாராவது வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன்" என்றார்.

மேலும் செய்திகள்