< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
துப்பறியும் அதிகாரியாக அஜித்
|4 Nov 2022 10:50 AM IST
பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ள ‘துணிவு’ படத்தில், அஜித்குமார் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறாராம்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அண்ணாசாலையில் நடைபெற்றுள்ளது. இரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை மூன்று மணி வரைதான் அனுமதி கொடுத்திருந்தார்களாம். ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி படப்பிடிப்பு நடந்ததால், காவல் துறையினர் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதி தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் ஜீனியர் ஆர்டிஸ்ட் பங்கேற்ற அந்த படப்பிடிப்பை பாதியில் நிறுத்தினால், தயாரிப்பாளர் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் இயக்குநர் வினோத் காவல் துறையினரிடம் கெஞ்சி அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தினாராம்.