< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் புதிய அப்டேட்
|7 Aug 2022 10:46 PM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'. 'டிரைவர் ஜமுனா' படத்தை இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.
வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' படத்தில் இடம் பெற்றுள்ள "கூல் டியூட்" பாடலின் ப்ரோமோ வீடியோ ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதன் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.