7ஜி ரெயின்போ காலனி 2-ம் பாகத்தில் அதிதி ஷங்கர்?
|7ஜி ரெயின்போ காலனி 2-ம் பாகத்தில் நடிக்க அதிதி ஷங்கருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் '7 ஜி ரெயின்போ' காலனி படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. '7 ஜி ரெயின்போ காலனி' ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்து 2004-ல் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. செல்வராகவன் இயக்கி இருந்தார்.
படத்தில் இடம் பெற்ற 'கண்பேசும் வார்த்தைகள்' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. 19 வருடத்துக்கு பிறகு தற்போது '7 ஜி ரெயின்போ காலனி' 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்க இருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.
இதில் நாயகியாக நடிக்க அதிதி ஷங்கர், இவானா உள்ளிட்ட சில நடிகைகளிடம் பேசி வருகிறார்கள். அதிதி ஷங்கருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் மகளான இவர் ஏற்கனவே விருமன், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.