பிரபல டைரக்டர் மீது இந்தி நடிகை சாரு அசோபா பாலியல் புகார்
|தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபல இந்தி நடிகையாக வலம் வரும் சாரு அசோபா பாலியல் தொல்லையை பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை கதாநாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ந்து புகார்கள் கிளம்பி வருகின்றன. மீ டூ இயக்கம் உருவான பிறகு நடிகைகள் பலரும் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தற்போது இந்தியில் இன் பேஷண்ட் விவேக், கால் பர் பன், ஜோஹரி யோல்க் உள்ளிட்ட பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் சாரு அசோபாவும் பாலியல் தொல்லையை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "20 வயதில் ஒரு படத்தில் நடிப்பதற்காக பெரிய பட நிறுவனத்துக்கு சென்று பிரபல டைரக்டர் ஒருவரை சந்தித்தேன். அவர் வாய்ப்பு தருவதாக சொன்னார். பிறகு அவரோடு மட்டுமன்றி தனக்கு தெரிந்த மேலும் சில இயக்குனர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றார். நான் முடியாது என்று மறுத்தேன்.
உடனே அந்த டைரக்டர் நீ சம்மதிக்கவில்லை என்றால் வெளியே நிறைய பெண்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார். அவர்களையே நடிக்க வையுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன். அவரது பேச்சால் எனக்கு 3 நாட்கள் காய்ச்சல் வந்து விட்டது'' என்றார்.