< Back
சினிமா துளிகள்
பிரபல நடிகை கவலைக்கிடம்
சினிமா துளிகள்

பிரபல நடிகை கவலைக்கிடம்

தினத்தந்தி
|
7 Nov 2022 3:35 PM IST

பிரபல நடிகை ஐந்த்ரிலா கோமா நிலையில் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபல வங்காள நடிகை ஐந்த்ரிலா. இவர் கதாநாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். ஐந்த்ரிலாவுக்கு ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு முறை சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். தற்போது மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஐந்த்ரிலாவுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. இதனால் அவரை ஹவுராவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

ஐந்த்ரிலா மூளையில் பல கட்டிகள் இருப்பதாகவும், இது அவரது உடல்நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். ஐந்த்ரிலா தற்போது கோமா நிலையில் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐந்த்ரிலா உடல்நிலை குறித்த தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணம் அடைய வலைத்தளத்தில் வாழ்த்தி வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Aindrila Sharma (@aindrila.sharma)

மேலும் செய்திகள்