விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடலுக்கு நடிகர்கள் அஞ்சலி
|விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர்கள், திரயுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை,
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பிரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர்கள், திரயுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சிம்பு, பரத், கார்த்தி, நிழல்கள் ரவி, சதிஷ், பார்த்திபன், சத்யராஜ், லிவிங்ஸ்டன், மிஸ்கின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மீராவின் உடல் நாளை காலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.