< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
மலையாள நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி மரணம்
|1 Aug 2022 3:56 PM IST
மாரடைப்பு காரணமாக, நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி மரணமடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி. இவர் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர்பீஸ், காயாங்குளம் கொச்சுண்ணி, நந்தனம், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கோழிகோட்டில் உள்ள குதுரசால் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பாபுராஜ் வாழப்பள்ளிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும், பிஷால் என்ற மகனும் உள்ளனர்.