< Back
சினிமா துளிகள்
விஜய் பட நடிகை கோர்ட்டில் சரண்
சினிமா துளிகள்

விஜய் பட நடிகை கோர்ட்டில் சரண்

தினத்தந்தி
|
19 Jun 2023 11:05 AM IST

செக் மோசடி வழக்கில் விஜய் பட நடிகை அமிஷா பட்டேல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

விஜய் நடித்து 2003-ல் வெளியான புதிய கீதை படத்தில் நடித்தவர் அமிஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். குணால் குரூமர் என்பவருடன் இணைந்து அமிஷா பட்டேல் இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் பெற்றார். படம் திரைக்கு வரும்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியையும் சேர்த்து ரூ.3 கோடிக்கு அமிஷா பட்டேல் செக் கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சியான அஜய்குமார் ராஞ்சி கோர்ட்டில் அமிஷா பட்டேல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அமிஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த நிலையில் அமிஷா பட்டேல் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அமிஷா பட்டேல் முகத்தை துப்பட்டாவால் மூடியபடி காரில் ஏறி சென்று விட்டார்.

மேலும் செய்திகள்