< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
ஒரு பாடலுக்கு ரூ.1 கோடி
|23 Jun 2023 12:24 PM IST
மாஸ் ஹீரோ படங்களில் குத்துப் பாடல் என்பது பிரதானமாகி வருகிறது. அதிலும் கவர்ச்சியாக வளைவு நெளிவுகளுடன் நடிகைகள் ஆட்டம் போடும் 'டிரெண்ட்' அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆட்டம் போட ஸ்ரேயாவிடம் பேச்சு நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கு ரூ.1 கோடியை அவர் சம்பளமாக கேட்டிருக்கிறாராம். `ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா?' என்று படக்குழு அதிர்ச்சி அடைந்தாலும், அவர் இருந்தால் அந்த பாடல் ஹிட் ஆகும் என்று நம்புகிறார்களாம். இதனால் `கொஞ்சம் குறைச்சுக்கோங்க...' என்று பேரம் பேசி வருகிறார்கள்.