ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம், டூன் நடிகை ஜெண்டயாவின் புதிய படம்
|ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தின் மூலம் ஜெண்டயா உலகளவில் பிரபலமானார்
வாஷிங்டன்,
ஜெண்டயா பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகை மற்றும் பாடகர் ஆவார். சிறுவயதிலையே திரையுலகில் ஆர்வம் கொண்டு தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வந்த இவர், ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். இது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கொடுத்தது.
ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம், டூன் பார்ட் 1, டூன் பார்ட் 2 என பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சனுடன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
இப்படத்தை, ஏ24 நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு "தி டிராமா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் போர்க்லி இயக்க உள்ளதாகவும் தெரிகிறது. இவர், இயக்கி கடந்த வருடம் வெளியான 'டிரீம் சினரியோ' பெரிய வெற்றி பெற்றது. இதனால், இப்படத்தின் அறிவிப்பை எதிர் நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.